உயிர்ச்சூழலின் விந்தைகள் விஞ்ஞானம் தரம் 6

 

அலகு 1

உயிர்ச்சூழலின் விந்தைகள்

எம்மை சுற்றிவர பல்வேறுசூழல்கள் காணப்படுகின்றன.வீட்டுத்தோட்டம்கட்டடங்கள்,நகர்ப்புறச்சூழல்,பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல்,நீர்நிலைகள்காடுகள்,தாவரம்,விலங்கு,வளி இவ்வாறான அனைத்துமே சூழலில் அடங்குகின்றன.

அலகு ரீதியான பரீட்சை - உயிர்ச்சூழலின் விந்தைகள்













உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்


சூழலின் கூறுகளை வகைப்படுத்தல்

சூழலில் உள்ள சில பொருள்கள் வளர்ச்சியைக் காட்டுவதுடன் சில பொருள்கள் வளர்ச்சியைக் காட்டுவதில்லை.


வளர்ச்சியைக்காட்டும் பொருள்கள்

மனிதன்,நாய்,தாவரங்கள்


வளர்ச்சியைக்காட்டாத பொருள்கள்

  • கட்டடங்கள்,புத்தகங்கள்,கல்
  • வளர்ச்சிஇனப்பெருக்கம்,அசைவுகள்,சுவாசம்,போசணை போன்றவாறான இயல்புகளை காட்டுபவை உயிருள்ளவையாகும்.மேற்குறிப்பிட்ட இயல்புகளை காட்டாதவை உயிரற்ற பொருள்கள் என அழைக்கப்படும்.


உயிருள்ளவை

கிளி,மனிதன்,தாவரம்


உயிரற்றவை

கல்,பேனை,கண்ணாடி


உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்

 

உயிருள்ளவற்றை மேலும் தாவரங்கள், விலங்குகள்,நுண்ணங்கிகள் என பாகுப்படுத்தலாம்.


தாவரங்கள்

  • மா
  • பலா
  • வாழை
  • புல்வகைகள்


விலங்குகள்

  • மனிதன்
  • புலி
  • கரப்பான்பூச்சி
  • மீன்


நுண்ணங்கிகள்


நுண்ணங்கிகளின் இயல்புகள்

வெறுங்கண்ணால் பார்க்கமுடியாத மிகச்சிறிய அங்கிகள் நுண்ணங்கிகள் என அழைக்கப்படும்.

  • கூட்டுநுணுக்குக்காட்டியானது நுண்ணங்கிகளை அவதானிக்கப்பயன்படும்.
  • நுண்ணங்கிகள் பல்வேறு சூழல்நிலைமைகளில் வாழக்கூடியது.மண்,நீர்,வளி மற்றும் மனிதஉடலிலும் நுண்ணங்கிகள் பரவிக்காணப்படும்.
  • பெரும்பாலான நுண்ணங்கிகள் மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு நன்மைபயக்கும்.
  • அதேவேளை தீங்கு விளைவிக்கும் , நோயை ஏற்படுத்தும் நுண்ணங்கிகளும் உள்ளன.

உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்


உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்


நுண்ணங்கிகளினால் கிடைக்கும் நன்மைகள்


  • பால் உற்பத்தி பொருட்களின் தயாரிப்பிற்க்குப்பயன்படும்.(யோகட்,தயிர்,வெண்ணெய்)
  • யோகட் உற்பத்தியின் போது , எனும் பற்றீரியா வளர்ப்பு பயன்;படுத்தப்படுகின்றது.
  • இவை பாலில் உள்ள லக்றோசு எனும் காபோவைதரேற்றை இலக்றிக்கமிலமாக மாற்றும்.இவ் அமில ஊடகத்தில் நுண்ணங்கிகளின் வளர்ச்சி தடைப்படும்,இதனால் யோகட் பாதுகாக்கப்படும்.
  • இவ்வாறாக பாற்கட்டி, பட்டர், வெண்ணெய்,தயிர் போன்ற பால்உற்பத்தி பொருட்கள் தயாரிப்பில் நுண்ணங்கிகள் செல்வாக்குசெலுத்துகின்றன
  •  மருத்துவத்துறையில் தடுப்பூசி,நுண்ணுயிர்கொல்லிகள் தயாரிப்பிற்க்குப்பயன்படும்
  • ஒரு நுண்ணங்கியின் உடலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் .இரசாயன பதார்த்தங்கள் நுண்ணுயிர்கொல்லிகள் என அழைக்கப்படும்.இவை மற்றொரு நுண்ணங்கியை அழிக்க அல்லது நலிவடைய செய்ய பயன்படுத்தப்படும்.
  • பற்றீரியா,பங்கசு என்பனவும் பயன்படுத்தப்படும்.
  • கூட்டுப்பசளை உற்பத்தியில் பயன்படும்
  • வினாகிரி உற்பத்தி

நுண்ணங்கிகளினால் ஏற்படும் பாதிப்புக்கள்

  • விலங்குகளுக்கு நோய்களை ஏற்படுத்தல்
  • உணவைப்பழுதடையசெய்தல்
  • தாவரங்களுக்கு நோய்களை ஏற்படுத்தல்
  • மனிதனில் நோய்களை ஏற்படுத்தல் (மலேரியா,வயிற்றுளைவு,தடிமன்)


அங்கிகளின் சிறப்பியல்புகள்

  1. வளர்ச்சி
  2. போசணை
  3. சுவாசம்
  4. இனப்பெருக்கம்
  5. அசைவு


வளர்ச்சி

அங்கியின் பருமனில் அதாவது உயரத்திலும் கனவளவிலும் திணிவிலும் ஏற்படும் மீளா அதிகரிப்பு வளர்ச்சி ஆகும்.

வளர்ச்சியானது அங்கியொன்றின் பொதுவான இயல்பாகும்.


போசணை

அங்கிகள் தமது உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்வது போசணையாகும்.


உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்


தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்துகொள்வனதற்போசணிகள்

தாவரங்கள் உற்பத்திசெய்யும் உணவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கியிருப்பவைபிறப்போசணிகள்


அசைவு

  • அசைவு அங்கிகள் காட்டும் பொதுவான இயல்பாகும்.
  • கடல்அனிமணி, முருங்கைகற்பொலிவுகள் என்பன அசைவைமட்டுமே காட்டும்.
  • அங்கிகள் அசைவை மட்டும் காட்டாது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு செல்லல் இடம்பெயர்வாகும்.
  •  விலங்குகளிற்க்கு இடம்பெயர விசேட அங்கங்கள் உண்டு.
  • விலங்குகளின இடம்பெயர்வு முறைகள்- ஓடுதல், நடத்தல், பறத்தல், நீந்துதல், ஊர்ந்துசெல்லல்.
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்

உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்


சுவாசம்

சுவாசசெயன்முறை ஊடாக பெற்றுக்கொள்ளும் வளியை பயன்படுத்தி உடலிற்க்கு தேவையான சக்கியை உற்பத்தி செய்யும் செயன்முறை சுவாசம் ஆகும்.


இனப்பெருக்கம்

அங்கிகளின் தொடர்ச்சியான நிலவுகைக்கு இனப்பெருக்க செயன்மறை அவசியமாகும்.

ஒரு அங்கி புதிய அங்கிகளை உருவாக்கும் செயன்முறை  இனப்பெருக்கம் ஆகும்.


இணைக்கவர்சுட்டி

யாதேனும் இயல்பொன்றை அடிப்படையாக கொண்டு (உண்டு அல்லது இல்லை) என்பவற்றிக்கு ஏற்ப சடப்பொருட்களை வகைப்படுத்தல்.

உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்
உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்

உயிர்ச்சூழலின் விந்தைகள்  தரம் 6  விஞ்ஞானம்


Post a Comment

Previous Post Next Post