எமது சூழலில் உள்ளவை
எமது சூழலில் உள்ளவை தரம் 6 விஞ்ஞானம் - சுற்றுப்புறச்சுழலில் பல்வேறு விடயங்களை அவதானிக்கின்றோம்.உதாரணமாக,மனிதர்கள்,தாவரங்கள்,விலங்குகள்,சூரிய ஒளி நீர்,காற்று.இவற்றை கண்களால் பார்க்ககூடியதாகவோ அல்லது சூரிய வெப்பத்தை உணரக்கூடியதாகவோ , சூழலில் கேட்கும் பல்வேறு ஒலிகளை கேட்ககூடியதாகவோ இருக்கும்.நாம் இவ்வாறாக அவதானிக்கும் விடயங்களை திணிவு (உண்டு அல்லது இல்லை),வெளியில் இடத்தை (கொள்ளும் அல்லது கொள்ளாது) என பாகுப்படுத்தலாம்.
திணிவு - யாதேனும் பொருளில் அடங்கியுள்ள சடப்பொருளின் அளவு திணிவு ஆகும்.(கிலோகிரேம்) kg , (கிரேம்) g,( மில்லிகிரேம் )mg ஆகிய அலகுகளில் அளக்கப்படும்.சர்வதேச நியம அலகு – kg (கிலோகிரேம்).திணிவு (உண்டு அல்லது இல்லை).
![]() |
எமது சூழலில் உள்ளவை தரம் 6 விஞ்ஞானம் |
சடப்பொருட்கள்
வெளியில் இடத்தை (கொள்ளும் அல்லத கொள்ளாது) போன்ற இயல்புகளின் அடிப்படையில்,திணிவை கொண்டதும் வெளியில் இடத்தை கொள்வதுமான பொருட்கள் சடப்பொருட்கள் என அழைக்கப்படும்.உதாரணமாக,புத்தகம், பலுன்,நீர், வளி, பேனை
சக்தி
திணிவை கொண்டிராததும் வெளியில் இடத்தை எடுத்துக்கொள்ளாததுமானவை சக்தி என அழைக்கப்படும்.உதாரணமாக,ஒலி,ஒளி,வெப்பம்,மின்சக்தி
சடப்பொருளின் பௌதீக நிலைமைகள்
சூழலில்
உள்ள பொருட்கள் இவ் மூன்று நிலைகளில் ஏதாவதொன்றாக காணப்படும்.
- திண்மம்
- திரவம்
- வாயு
![]() |
எமது சூழலில் உள்ளவை தரம் 6 விஞ்ஞானம் |
திண்மச்சடப்பொருளின் இயல்புகள்
திட்டமான வடிவம் காணப்படும்.திட்டமான கனவளவு காணப்படும்.
உதாரணங்கள்,கல்,புத்தகம்,கட்டடம்,கண்ணாடி,மனிதன்,பேனை
திரவச்சடப்பொருளின் இயல்புகள்
வாயுசடப்பொருளின் இயல்புகள்
வாயுக்கள் இடப்படும் பாத்திரத்தில் முழுவதும் பரவிக்காணப்படும், பாத்திரத்தின் கனவளவு முழுவதையும் அடைக்கும்.திட்டமான வடிவம் காணப்படாது.திட்டமான கனவளவு காணப்படாது.உதாரணங்கள்,ஒட்சிசன் வாயு, காபனீரொட்சைட்டு வாயு, நைதரசன் வாயு, நீராவி.
திண்ம சடப்பொருட்கள் (திரவியங்களின் ) பௌதீக இயல்புகள்
- வன்மைத்தன்மை
- வாட்டற்றகவு (மென்றகடாகுதன்மை)
- நீட்டற்தகவு (நுண்கம்பியாகுதன்மை)
- மீள்தன்மை
- நொருங்கும் இயல்பு
- இழையமைப்பு
வன்மைத்தன்மை
புறவிசையொன்றை வழங்கும் போது திரவியத்தின் வடிவத்தினை மாற்ற முடியாத தன்மை.ஒவ்வொறு திரவியத்திற்க்கும் வன்மைத்தன்மை வேறுப்படும்.உதாரணமாக, இரும்பு, வைரம்.
வாட்டற்றகவு
நீட்டற்தகவு
திரவியமொன்றை இழுக்கும் போது நொருங்காமல் உடையாமல் நீட்டி கம்பியாக மாற்றக்கூடிய தன்மையாகும்.உதாரணமாக,அலுமினியம், செம்பு.
மீள்தன்மை
திரவியமொன்றிற்க்கு விசையை வழங்கும் போது இழுப்படக்கூடியதும் விசையை அகற்றும் போது பழைய நிலைக்கு திரும்பக்கூடியதுமான தன்மை.உதாரணமாக,பிளாத்திக் நாடா,இறப்பர் நாடா.
நொருங்கும் இயல்பு
திரவியமொன்று இலகுவாக உடையக்கூடிய அல்லது நொருங்கக்கூடிய தன்மையாகும்.உதாரணமாக,கண்ணாடி.
இழையமைப்பு
திரவியமொன்றை தொடும் போது அழுத்தமானதாக அல்லது கரடானதாக காணப்படும் தன்மை.உதாரணமாக,
பஞ்சு
– மென்மையானது
மணல்
- கரடுமுரடானது
இவ்வாறு திண்மங்களில் காணப்படும் பல்வேறு சிறப்பியல்பு காரணமாக அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றது.உதாரணமாக,வீட்டை அமைப்பதற்க்கு தேவையான கதவு, கூரை, யன்னல், சுவர் போன்றனவும் திரவியங்களால் உருவாக்கப்படும்.எமது சூழலில் உள்ளவை (திண்மங்கள்) அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.பிளாத்திக் பாத்திரங்கள் இறப்பரினால் தயாரிக்கப்படும், இதற்கு இறப்பரின் மீள்தன்மை காரணமாகும்(எமது சூழலில் உள்ளவை தரம் 6 விஞ்ஞானம் ).