தாவரப்பல்வகைமை
விஞ்ஞானம் தரம் 7 தாவரப்பல்வகைமை எனும் பாடப்பரப்பை அடிப்படையான பாடக்குறிப்புகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.(விஞ்ஞானம் தரம் 7 தாவரப்பல்வகைமை அலகு 1)இற்கான அலகு பரீட்சையும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பாடகுறிப்புக்களையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளமுடியும்.எமது அயற்சூழலில் பல்வேறு தாவரவகைகள் உள்ளன.அவற்றை அழகிற்காக வளர்க்ககூடியவை, மூலிகைதாவரங்கள், புல்வகைகள், பன்னங்கள் என பாகுப்படுத்தலாம். எனினும் சில தாவரங்கள் பூக்களை தோற்றுவிக்கும். சில தாவரங்கள் பூக்களை தோற்றுவிக்காது.இதனை அடிப்படையாக கொண்டு பூக்களை தோற்றுவிக்கும் தாவரங்களை பூக்கும் தாவரங்கள் எனவும் பூக்களை தோற்றுவிக்காத தாவரங்களை பூக்காத தாவரங்கள் எனவும் வகைப்படுத்தலாம்.
![]() |
தாவரப்பல்வகைமை தரம் 7 |
![]() |
தாவரப்பல்வகைமை தரம் 7 |
எமது
சுற்றுப்புறச்சூழலில்
காணப்படும் தாவரங்களில் பூக்கள்,இலைகள்,வேர் வகைகள்,பழம், போன்றவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுப்பட்டவை.உருவவியல் அமைப்பகள் வேறுப்பட்டு காணப்படும்.
பூக்கும் தாவரமொன்றின் பகுதிகள்
![]() |
தாவரமொன்றின் பகுதிகள் |
பூக்கும் தாவரமொன்றின் பிரதான பகுதிகளிடையே காணப்படும் பல்வகைமை
பூக்கம்
தாவரமொன்றின் வேர்,தண்டு.இலை,பூக்கள்,அரும்பு,பழங்கள் போன்ற அனைத்தழலும் பல்வகைமையை காணலாம்.
தாவரங்களின் வேர்களிடையேயான பல்வகைமை
பொதுவாக
தாவர வேர்களை ஆணிவேர் கொண்ட தாவரங்கள்,நாருருவேர் கொண்ட தாவரங்கள் என இருவகைப்படுத்தலாம்.ஆணிவேர் - தாவரமொன்றின்
தண்டிலிருந்து அடிப்பகுதியை நோக்கிச்செல்லும் நீண்ட தனிவேராகும்.ஆணிவேர்த்தொகுதியில் சிறிய கிளைவேர்கள் காணப்படும், இவை பக்கவேர்கள் என அழைக்கப்படும். உதாரணமாக, பலாமரம், குப்பைமேனி, கொய்யா. நாருருவேர்த்தொகுதி - தாவரமொன்றின் தண்டிலிருந்து அடிப்பகுதியை நோக்கிச்செல்லும் ஒரே பருமனைக்கொண்ட அதிகளவான வேர்கள் நாருருவேர்கள் எனப்படும்.உதாரணமாக,மூங்கில்,தென்னை,புல் வகைகள்.
வேர்களின் தொழில்கள்
தாவரங்கள்
மண்ணுடன் நன்கு பதிக்கப்பட, பற்றிப்பிடிக்க வேர்கள் பங்களிப்புசெய்யும்.மண்ணில் கரைந்துள்ள நீர்,கனியுப்பக்கள் அகத்துறிஞ்ச உதவும்.சில தாவர வேர்வகைகளை பயன்படுத்தி புதிய தாவரங்களை உருவாக்கலாம். பதியமுறை இனப்பெருக்கம் மேற்கொள்ளல். உதாரணமாக, ஈரப்பலர், கறிவேப்பில்லை. சில தாவர வேர்களில் வாழும் பற்றீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைதரசனை பதித்து தாவரங்களிற்க்கு வழங்கும்.இதன் மூலம் தாவரத்திற்க்கு தேவையான போசணை கிடைக்கும். உதாரணம், தொட்டாஞ்சுருங்கி, அகத்தி, அவரை, போஞ்சி. இத்தாவர வேர்களில் உள்ள வேர்சிறுகணுக்களில் காணப்படும் பற்றீரியாக்களின் பங்களிப்பினால் நைதரசன் பதிக்கப்பட்டு தாவரத்திற்க்கு வழங்கப்படும்.
சில
தாவர வேர்களில் உணவு சேமிக்கப்பட்டு காணப்படும் (கிழங்குவகைகள்).ஆணி வேர்கள், நாருரு வேர்கள் போன்றவற்றில் உணவு சேமிக்கப்படும்.இவை உணவு சேமிப்பு வேர்கள் என அழைக்கப்படும்.உதாரணமாக,
கரட், பீட்ருட் மரவள்ளி.
தாவரவேர் வகைகளின் பல்வகைமை
- தாங்கும் வேர்கள் : தாவரகிளைக்கு ஆதாரம் வழங்கும் - ஆலமரம்
- மிண்டி வேர்கள் : தாவரதண்டிற்க்கு மேலதிக ஆதாரம் வழங்கும் - றைசோபோறா,தாழை,றம்பை
- காற்றுக்குரிய வேர்கள் : வளியுள்ள நீராவியை உறிஞ்சி ஒளித்தொகுப்பு செய்யும் - ஓர்க்கிட்டுத்தாவரம்
- ஏறும் வேர்கள் : தண்டு மேல்நோக்கிவளர ஆதாரத்தை பற்றிக்கொள்ளும் - வெற்றிலை,போத்தஸ்,மிளகு
- மூச்சு வேர்கள் : வளிமண்டலத்துடன் வாயுபரிமாற்றம் நடைப்பெற உதவும் - அவிசீனியா,சொனராட்டியா(கிண்ணை),றைசோபோறா.
- உணவுச்சேமிப்புவேர்கள் : உணவைச்சேமித்தல் - கரட்,பீட்ருட்
- வேர்சிறுகணுக்களைக்கொண்ட வேர்கள் : வேர்சிறுகணுக்களில் வாழும் பற்றீரியாக்கள் வளிமண்டல நைதரசனை பதித்து தாவரத்திற்க்கு வழங்கும் - பயற்றை,போஞ்சி,அவரை
விஞ்ஞானம் தரம் 7 தாவரப்பல்வகைமை எனும் பாடப்பரப்பை அடிப்படையான பாடக்குறிப்புகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.(விஞ்ஞானம் தரம் 7 தாவரப்பல்வகைமை அலகு 1)இற்கான அலகு பரீட்சையும் இணைக்கப்பட்டுள்ளது.இப்பாடகுறிப்புக்களையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளமுடியும்.