பூக்களின் பகுதிகளும் பூக்களின்
பல்வகைமையும்
பூக்களின் பகுதிகள் தரம் 7 விஞ்ஞானம் பாடத்தினை அடிப்படையாகக் கொண்ட பாடக்குறிப்புகள், தாவரப்பல்வகைமை தரம் 7 விஞ்ஞானம் அலகு 2 பரீட்சை வினாத்தாள்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.பூக்களின் பிரதான பகுதிகள் ,அவற்றின் தொழில்கள், பழங்களினதும் வித்துக்களினதும் பரம்பல் நடைப்பெறும் முறைகள்,ஒருவித்திலை,இருவித்திலை தாவரங்களின் இயல்புகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.எமது அயற்சுழலில் பல்வேறு வகையான பூக்களை அவதானிக்கின்றோம்.அவற்றின் மணம் ,நிறம்,வடிவம்,பருமன் என்பவற்றில் பாரிய பலவகைமை உள்ளது.பூக்களில் இருந்தே காய்கள் தோன்றும்.பூக்களின் பிரதான தொழில் வித்துக்களையும் அவற்றிவிருந்து பழங்களையும் உருவாக்குவதாகும்.
பூவின் கட்டமைப்பு
பூக்களின் பகுதிகள் தரம் 7 விஞ்ஞானம் |
புல்லிவட்டம் -
பூவினை அரும்புநிலையில் பாதுகாக்கும், பொதுவாக பச்சைநிறமானவை.
அல்லிவட்டம் -
பூக்கள் மிகவும் கவர்ச்சியானவை.இதற்கு பிரதான காரணம் பூக்களில் காணப்படும் இதழ்கள் அல்லது அல்லிகள்.பல்வேறு நிறத்தினாலான அல்லிகள் உண்டு,இவை பூச்சிகளை கவரும், மகரந்தசேர்க்கைக்கு உதவும்.மேலும் அரும்பு நிலையில் பூவின் பகுதிளை பாதுகாக்கும்.
ஆணகமும் பெண்ணகமும்
ஆணகம் - கேசரம் ஆகும்,இரு பிரதான பகுதிகளைக்கொண்டது, மகரந்தக்கூடு,இழை. பல்வேறு வடிவங்களை உடைய கேசரங்கள் உள்ளன.ஆணகங்கள் அல்லது கேசரங்களின் பிரதான தொழில் மகரந்தமணிகளை உற்பத்திச்செய்தல்.
![]() |
பூக்களின் பகுதிகள் தரம் 7 விஞ்ஞானம் |
பெண்ணகம்மூன்று பிரதான பகுதிகளைக்கொண்டது.குறி,சூழகம், தம்பம்.பெண்ணகத்தின் பிரதான தொழில் சூல்வித்தக்களை உற்பத்திசெய்தல்.மகரந்தக்கூட்டிலிருந்து உற்பத்திசெய்யப்படும் மகரந்தமணியுடன் சூழகத்தில் காணப்படும் சூல்வித்துக்கள் இணைந்து வித்துக்களையும் பழங்களையும் தோற்றுவிக்கும்.
பூக்களின் பகுதிகள் தரம் 7 விஞ்ஞானம் |
பழங்களினதும் வித்துக்களினதும் பரம்பல்
பழங்களில்
காணப்படும் வித்துக்களிலிருந்து புதிய தாவரங்கள் உருவாகும்.பழங்களும் வித்துக்களும் இயற்கையாகவே பரம்பலடைகின்றன.
- காற்றின் மூலம் பரம்பலடையும் வித்துக்கள் - பருத்தி, தணக்கு,எண்ணெய்,எருக்கு
- நீரினால் பரம்பலடையும் வித்துக்கள் - தாமரை,தென்னை,கமுகு,கத்தாப்பு,கல்லித்தி
- விலங்குகளின் ஊடாக பரம்பலடையம் வித்துக்கள் - மிளகாய்,பப்பாசி,தக்காளி
ஒருவித்திலைத்தாவரங்களும் இருவித்திலைத்தாவரங்களும்
பூக்கும்
தாவரங்களை ஒருவித்திலைத்தாவரங்கள் இருவித்திலைத்தாவரங்கள் என வகைப்படுத்தலாம்.
ஒருவித்திலைத்தாவரங்கள்
- வேர் - நாரருவேர்த்தொகுதி
- தண்டு – கிளைகளைக்கொண்டிருக்காது
- இலை – சமாந்தரநரம்பமைப்பைகொண்டது
- பூ - பூவிதழ்கள் 3 அல்லது அதன் மடங்காகக்காணப்படும்.
- தனியொரு வித்திலை காணப்படும்.
இருவித்திலைத்தாவரங்கள்
- வேர் - ஆணிவேர்த்தொகுதி
- தண்டு – கிளைகளைக்கொள்ளும்.
- இலை – வலையுரு நரம்பமைப்பைகொண்டது
- பூ - பூவிதழ்கள் 5 அல்லது அதன் மடங்காகக்காணப்படும்.
- இரண்டு வித்திலைகள் காணப்படும்.
பூக்களின் பகுதிகளும் பூக்களின் பல்வகைமையும் தரம் 7 விஞ்ஞானம் பாடத்தினை அடிப்படையாகக் கொண்ட பாடக்குறிப்புகள், தாவரப்பல்வகைமை தரம் 7 விஞ்ஞானம் அலகு 2 பரீட்சை வினாத்தாள்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.