நுண்ணங்கிகளின் முக்கியத்துவம்
நுண்ணங்கிகளின்
முக்கியத்துவம் தரம் 8 விஞ்ஞானம் எனும் பாடப்பரப்பிற்கான விடயஉள்ளடக்கம் - நுண்ணங்கிகள், நுண்ணங்கிகளின் வகைகள், நுண்ணங்கிகளால் ஏற்படும் பாதிப்புக்கள்,நோய்கள் என்பவற்றை உள்ளடக்கியது. இவ் இணையத்தளத்தினுடாக அலகு பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்களையும் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். எமது சூழலில் உள்ள கூறுகளை வெறுங்கண்ணால் அவதானிக்ககூடியதாகக் காணப்படும. எனினும் வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியாத சிறிய அங்கிகளும் உண்டு. இவை நுண்ணங்கிகள் ஆகும். இவற்றை ஒளிநுணுக்குகாட்டியினூக அவதானிக்கலாம்.
நுண்ணங்கிகளின் முக்கியத்துவம் தரம் 8 விஞ்ஞானம் |
நுண்ணங்கிகள்
தனிக்கலம்
அல்லது பல கலங்கள் கொண்ட
, வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய அங்கிகள் நுண்ணங்கிகள் ஆகும். நுண்ணங்கிகள் எல்லாச் சூழலிலும் காணப்படு;ம். சுற்றுப்புறச்சூழல், அங்கிகளின் உடல், தாவர விலங்குகளில் காணப்படும். பாலைவனம், பனிப்பாறைகள், சமுத்திரங்கள், வெந்நீரூற்று, சதுப்புநிலம் போன்ற தகாத சூழலிலும் வாழக்கூடியவை. நுண்ணங்கிகளின் பருமன், வடிவம், உருவவியல், போசணை முறைக்கு ஏற்ப பல்வகைமைக் காணப்படுகின்றது.
நுண்ணங்கிகளின் வகைகள்
நுண்ணங்கிகளின்
பருமன், வடிவம், உருவவியல், போசணை முறைக்கு ஏற்ப பின்வருமாறு பற்றீரியாக்கள் , அல்காக்கள் , பங்கசுக்கள் , புரோட்டோசோவான்கள் , வைரசுக்கள் எனப் பாகுப்படுத்தப்பட்டுள்ளது.
நுண்ணங்கிகளிலினால் ஏற்படும் பாதிப்புக்கள்
- உணவு பொருட்கள் மீது நுண்ணங்கிகள் தொழிற்பாடு காரணமாக நுகர்விற்க்கு பொருத்தமற்ற நிலைக்கு மாறுதல். நுண்ணங்கிகள் உணவு பொருட்கள் மீது தொழிற்படுவதன் மூலம் மணம் , சுவை , நிறம் , இழையமைப்பு என்பன மாற்றமடையும். இதனால் உணவு பழுதடையும்.
- உடை மற்றும் தளபாடங்கள் மீது நுண்ணங்கிகள் வளர்வதனால் பாதிப்புக்கள் ஏற்படல்.பங்கசுக்கள் கட்டடங்கள், உடைகள், சுவர்கள் மீது வளர்ச்சியடைந்து பாதிப்படையுக்.
- மனிதனுக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் நோயை ஏற்படுத்தல்.
- பங்கசுக்களினால் தேமல் , மரு ,தோல் அழற்சி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. வைரசுகளினால் எயிட்ஸ், தடிமன் ,டெங்கு காய்;ச்சல் , பற்றீரியாக்களினால் தொழுநோய், தைபொயிட்டு, புரட்டோசோவாக்களால் அமீபா வயிற்றுளைவு , மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.
நுண்ணங்கிகளினால் தாவரங்களிற்க்கு ஏற்படும் நோய்கள்
- உருளைக்கிழங்கு – குருத்தழுகல்
- பப்பாசி - இலைச்சித்திரவடிவ நோய்
- மிளகாய் - இலைச்சுருளல்
நுண்ணங்கிகளால் விலங்குகளில் ஏற்படும் பாதிப்புக்கள்
- மாடு – கால்வாய் நோய் , மடி அழற்சி
- நாய் - நீர்வெறுப்பு நோய்
நுண்ணங்கிகளினால் ஏற்படும் நன்மைகள்
கைத்தொழில்
துறையில் நுண்ணங்கியின் செல்வாக்கு மிகமுக்கியமானது. இறந்த தாவர விலங்குகளை பிரிகையழித்தல் , புPடைகளை கட்டுப்படுத்தல்
(உயிரியல் கட்டுப்பாடு), பால் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி , யோகட் உற்பத்தி, வெதுப்பக உற்பத்திகள், நுண்ணுயிர்க் கொல்லிகளின் உற்பத்திகள், வக்சீன் தயாரிப்பு, உணவுக்காக பயன்படுத்தபடும் காளான், பாலைத் தயிராக்குதல், வினாகிரி மதுசார உற்பத்தி, கூட்டுப் பசளை உற்பத்தி, உயிர்வாயு உற்பத்தி, தும்புக் கைத்தொழிலில் பயன்படல். வெதுப்பக உணவு உற்பத்தியில் மதுவத் தொழிற்பாடு காரணமாக பாண், பணீஸ் போன்றன மென்மைத் தன்மையடையும். புhனை வெதுப்பும்
போது எதனோல் வெளியேற்றப்படும்.
நுண்ணங்கிகளின்
முக்கியத்துவம் தரம் 8 விஞ்ஞானம் எனும் பாடப்பரப்பிற்கான அலகு பரிட்சை வினாத்தாளை இங்கு பதிவிறக்கலாம்.