நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்

 நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் 

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம் எனும் பாடப்பரப்பானது நுண்ணங்கிகளின் வகைகள், நுண்ணங்கிகளின் செல்வாக்கு, நுண்ணங்கிகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் , நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் என்பவற்றை உள்ளடக்கியது. நுண்ணஙகிகள் எமது சூழலில், தாவர விலங்குகளில் ,மனித உடலில் என பல்வேறு சூழல் நிலைமைகளில் வாழக்கூடியது,இவை தனியொரு கல அமைப்பையோ பல்கலமாகவோ காணப்படும்.நுண்ணங்கிகளை இவற்றின் போசணை, வடிவம், உடலமைப்பு, என்பவற்றுக்கு ஏற்ப பிரதானமாக 5 கூட்டங்களாக வகைப்படுத்தலாம்.


நுண்ணங்கிகளின் வகைகள்

  1. பற்றீரியா
  2. பங்கசு
  3. அல்கா
  4. புரட்டோசோவா
  5. வைரசு

பற்றீரியா

தனியொரு கல அமைப்பைக் கொண்டது. நுணுக்குகாட்டிக்குரியவை. பல்வேறு உடல் வடிவங்களை கொண்டது.பெரும்பாலும் கைத்தொழில் உற்பத்திகளில் மருத்துவதுறைகளில் பயன்படும். அதேவேளை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் பற்றீரியாக்களும் உள்ளன.இவை மனிதனில் தாவரங்களில் விலங்குகளில் நோய்களை ஏற்படுத்தும்.


நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்
நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்



பங்கசு

இவை தனிக்கலங்கள் அல்லது பல்கலங்களைக் கொண்ட நுண்ணங்கிக்கூட்டம், நுணுக்குக்காட்டிக்குரியவை. சில வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். (காளான்)

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்
நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்



புரோட்டோசோவா

தனியொரு கல அமைப்பைக் கொண்டது. நுணுக்குகாட்டிக்குரியவை. பல்வேறு உடல் வடிவங்களை கொண்டது. இடப்பெயர்ச்சிக்காக விசேட அமைப்புக்கள் காணப்படும்.உதாரமாக, போலிப்பாதங்கள்  ,சவுக்குமுளை ,பிசிர்கள் 

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்
நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்



அல்காக்கள்

தனிக்கல அல்லது பல்கல அமைப்பை கொண்ட நுணுக்குக்காட்டிக்குரியவை, சில நீரில் மிதந்து காணப்படும். பிரிவிலி அமைப்பை கொண்டது. சில பச்சையத்தை கொண்டிருப்பதால் ஒளித்தொகுப்பு செய்யும். சுpலவற்றை வெற்றுக்கண்ணால் காணலாம்.

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்
நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்



வைரசு

கலவொழுங்கமைப்பு அற்ற நுணுக்குகாட்டிக்குரிய நுண்ணங்கிக்கூட்டம். உயிருள்ளவற்றிக்கும் உயிரற்றவற்றிக்கம் இடைப்பட்ட இயல்பைக்காட்டும்.பெருக்கமடைய அங்கிகளின் உடல் அவசியமானது. வளர்ச்சி ,போசனை, சுவாசம், போன்றவற்றை காட்டாது,

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்
நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம்



நுண்ணங்கிகளின் செல்வாக்கு


நுண்ணங்கிகளின் செல்வாக்கு விவசாயத் துறையில்,

  • பரம்பரையலகு தொழில்நுட்பப்பிரயோகம் - போசணைத்தரம் உயர்வான உடைய பொன்னிற அரிசி உற்பத்தி 
  • பீடைக்கொல்லிகள், களைக்கொல்லிகள் உற்பத்தி 
  • நைதரசன் பதித்தல் 
  • உயிரியல் வளமாக்கி 
  • கூட்டுப்பசளை உற்பத்தி 
  • உயிரியல் பீடைக்கொல்லிகள் 

நுண்ணங்கிகளின் செல்வாக்கு மருத்துவ துறையில்,

  • நோய்தடுப்பு வக்சீன்கள் உற்பத்தி 
  • தொட்சின்கள் உற்பத்தி 
  • நுண்ணுயிர்க்கொல்லிகள் உற்பத்தி 

நுண்ணங்கிகளின் செல்வாக்கு கைத்தொழில் துறையில்,

  • பால் சார்ந்த உற்பத்திகள் (யோகட், தயிர், வெண்ணெய், பாற்கட்டி)
  • வெதுப்பக உற்பத்தி 
  • தும்பு உற்பத்தி 
  • தாவர நார் பிரித்தெடுப்பு 
  • வினாகிரி உற்பத்தி 
  • மதுசார உற்பத்தி 
  • உயிர்வாயு உற்பத்தி 
  • உலோகப்பிரித்தெடுப்பு 

நுண்ணங்கிகளின் தீய விளைவுகள்


நுண்ணங்கிகள் மனிதனில் நோய்களை ஏற்படுத்தல்

  • வைரசுதடிமன், டெங்குகாய்ச்ல் ,எயிட்ஸ்
  • பற்றீரியாகாசநோய், தைப்பொயிட்டு காய்ச்சல்
  • புரோட்டோசோவாமலேரியா, அமீப வயிற்றுளைவு, லிஸ்மேனியா
  • பங்கசுதேமல், மரு

நுண்ணங்கிகள் தாவரங்களில் நோய்களை ஏற்படுத்தல்


  • சாம்பற்பூஞ்சணம் ,பங்கசுவினால் ஏற்படுத்தப்படும் - பப்பாசி, திராட்சை, இறப்பர்
  • பிற்கூற்று ,வெளிரல் பங்கசுவினால் ஏற்படுத்தப்படும - உருளைக்கிழங்கு
  • வாடல், பங்கசுவினால் அல்லது பற்றீரியாவினால் ஏற்படுத்தப்படும - தக்காளி

உணவு பழுதடைதல்


நுண்ணங்கி வளர்ச்சிக்கு தேவையான காரணிகள் உணவில் காணப்படுவதால் நுண்ணங்கிகள் உணவில் பெருக்கமடைந்து பாதமகான பதார்த்தங்களாக மாற்றப்பட்டு நுகர்விற்க்கு பொருத்தமற்றுபோதல்.

  • காபோவைதரேற்றுநொதித்தல்
  • புரதம் - அழுகலடைதல்
  • இலிப்பிட்டுபாண்டலடைதல்

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள்தரம் 9 விஞ்ஞானம் ,இங்கு இப்பாடகுறிப்பை தரவிறக்கலாம்.

நுண்ணங்கிகளின் பிரயோகங்கள் தரம் 9 விஞ்ஞானம் அலகு 1 இற்கான பரீட்சை வினாத்தாளினை இவ் இணையத்தளத்தினுடாக தரவிறக்கலாம்.(pdf)


Post a Comment

Previous Post Next Post