உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்

 உயிரின 

இரசாயன அடிப்படை

உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 ,இவ் இணையத்தளதினூடாக பாடக்குறிப்புகள், பாடரீதியான அலகு பரீட்சை வினாத்தாள், முன்வைப்புகளிற்கான பாடகுறிப்புக்களை உள்ளடக்கிய pdf போன்றவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.அங்கிகளின் உடல் பல்வேறு இரசாயன சேர்வைகளைக் கொண்டுள்ளதுபுpரதானமாக காபன்ஜதரசன்நைதசன்ஒட்சிசன் போன்ற மூலகங்களால் ஆனதுமேலும் உயிர் சடப்பொருட்கள் ஆக்கப்பட்டுள்ள மூலகங்களை இருவகைப்படுத்தலாம்காபன் மூலகம் அடங்கியுள்ள சேர்வைகள் சேதனச்சேர்வைகள் எனப்படும்காபன் மூலகம் அடங்காத சேர்வைகள் அசேதன சேர்வைகள் எனப்படும்உயிர் சடப்பொருட்கள் ஆக்கப்பட்டுள்ள பிரதான சேதன சேர்வைகள் உயிரியல் மூலகூறுகள் எனப்படும்இவை நான்கு வகைப்படும்.


  • பாடரீதியான அலகு பரீட்சை வினாத்தாள்

download



  1. காபோவைதரேற்று
  2. புரதம்
  3. இலிப்பிட்டு
  4. நியுக்கிலிக்கமிலம்



உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்
உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்



காபோவைதரேற்று

  • இவை மூன்று வகைப்படுத்தப்படும்
  • ஒரு சக்கரைட்டுகள், இருசக்கரைட்டுக்கள், பல் சக்கரைட்டுகள்

ஒரு சக்கரைட்டுக்கள் - எளிய வெல்லமாகும். காபோவைதரேற்றின கட்டமைப்பு அலகு. இனிப்புச்சுவை கொண்டவை. பளிங்குரு அமைப்பைக் கொண்டவை. நீரில் கரையும். குளுக்கோசு, பிறக்றோசு, கலக்றோசு என்பவை உதாரணங்களாகும்.


  • குளுக்கோசுபழங்கள், தேன்
  • பிறக்றோசுபழம், இனிப்பு பூசணி, தேன், கரட்
  • கலக்றோசுபால், பாலுற்பத்தி உணவுகள்

இரு சக்கரைட்டுகள் - ஒரு சக்கரைட்டுக்கள் இரண்டு இணைந்து உருவாகும். இனிப்பு சுவை உடையது. நீரில் கரையக்கூடியது. பளிங்குருவானது. மோல்றோசு, சுக்குரோசு, இலக்றோசு என்பவை உதாரணங்களாகும்.


  • மோல்றோசுமுளைக்கும் வித்துக்கள்
  • சுக்குறோசுசீனி, கரும்புச்சாறு, பழங்கள்
  • இலக்றோசுபாலுணவுகள்

பல் சக்கரைட்டுக்கள் - ஒரு சக்கரைட்டு மூலக்கூறுக்கள் இணைந்து பல்பகுதியமாக்கல் மூலம் பல்சக்கரைட்டுக்கள் உருவாகும். பல் சக்கரைட்டுக்களின் கட்டமைப்பு அலகு குளுக்Nகுhசு ஆகும். செலுலோசு, மாப்பொருள், கிளைக்கோசன் ஆகியன உதாரணங்களாகும்.

  • செலுலோசு - தாவர கலச்சுவர், தாவர நார்
  • மாப்பொருள் - கிழங்கு, ஈரப்பலா, தானியவகை, பலா
  • கிளைக்கோசன் - தசை, ஈரல்


புரதங்கள்

உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்
உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்


  • காபன் ,ஒட்சிசன், நைதரன், ஜதரசன் மூலகங்களால் ஆனது.
  • புரதங்களின் முக்கியத்துவம்
  • சக்தி பிறப்பிக்கும் கூறாகும்
  • கட்டமைப்புப்கூறுகளினை உருவாக்கும்.
  • நொதியமாக தொழிற்படும்
  • ஓமோனாக தொழிற்படும்
  • பிறப்பொருளெதிரியாக தொழிற்படும்


இலிப்பிட்டுகள்

உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்
உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்


  • காபன், ஜதரசன், ஒட்சிசன் ஆகிய மூலகங்களால் ஆனது, எண்ணெய், கொழுப்பு என்பன இக்கூட்டத்தில் உள்ளடங்கும்.
  • சக்தி முதலாக தொழிற்படும்.
  • முதலுறு மென்சவ்வின் கட்டமைப்பு கூறாகும்.
  • நீர்காப்பு செய்வதற்க்கு பயன்படும்.
  • உடல் வெப்பநிலையை பேணுதல்
  • உட்புற அங்கங்களை பாதுகாத்தல் (கொழுப்புப்படை)
  • ஓமோன்களின் உற்பத்திக்கு உதவுதல்


நியுக்கிளிக்கமிலங்கள்

உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்
உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 விஞ்ஞானம்


  • காபன், ஜதரசன், ஒட்சிசன், நைதரசன், பொசுபரசு, மூலகங்களால் ஆனது.
  • DNA- கருவில் காணப்படும்  DNA மூலக்கூறில் பாரம்பரியதகவல்கள் களஞ்சியப்படுத்தப்படும்.
  • RNAமற்றுமொரு நியுக்கிலிக்கமிலமாகும். புரததொகுப்பு பயன்படும்



உயிரின இரசாயன அடிப்படை தரம் 10 ,இவ் இணையத்தளதினூடாக பாடக்குறிப்புகள்பாடரீதியான அலகு பரீட்சை வினாத்தாள்முன்வைப்புகளிற்கான பாடகுறிப்புக்களை உள்ளடக்கிய pdf போன்றவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


  • முன்வைப்புகளிற்கான பாடகுறிப்புக்களை உள்ளடக்கிய pdf

1 Comments

Previous Post Next Post