நேர்கோட்டு இயக்கம்
நேர்கோட்டு
இயக்கம் தரம் 10 விஞ்ஞானம் இப்பாடத்திற்கான பாட உள்ளடக்கம், தூரமும் இடப்பெயர்ச்சியும், கதி, வேகம், ஆர்மூடுகல், இடப்பெயர்ச்சி – நேர வரைபு, வேக – நேர வரைபு, புவியீர்ப்பிலான ஆர்மூடுகல். இப்பாட உள்ளடக்கங்களிற்கான அலகு பரீட்சை வினாத்தாள், இணையவழி பயிற்ச்சிகள், முன்வைப்புகளிற்கான என்பவை இணைக்கப்பட்டுள்ளன.
கணியம்
- இரு வகைப்படும். காவிக்கணியம், எண்ணிக்கணியம்.
- பருமனும் திசையும் கொண்டவை காவிக்கணியமாகும். உதாரணம், வேகம், இடப்பெயர்ச்சி.
- பருமனை மட்டும் கொண்டவை எண்ணிக்கணியமாகும். உதாரணம், தூரம், கதி, நேரம், வெப்பநிலை
தூரம்
- பயணம் செய்த பாதையின் மொத்த நீளம் தூரம் ஆகும்.
- தூரம் ஒரு எண்ணிக்கணியம். பருமன் காணப்படும். திசை இல்லை. தூரமானது பயணிக்கும் பாதையில் தங்கியிருக்கும்.
இடப்பெயர்ச்சி
- ஒருபுள்ளியில் இருந்து இன்னுமொரு புள்ளிக்கு குறித்த திசையில் ஏற்படும் நிலை மாற்றம் இடப்பெயர்ச்சி எனப்படும். இடப்பெயர்ச்சி காவிக்கணியமாகும். பருமன், திசை உண்டு.
கதி
- ஓரலகு நேரத்தில் பயணம் செய்த தூரம் கதி ஆகும். இயங்கிய மொத்த தூரத்தை நேரத்தால் வகுக்கும் போது சராசரி கதி பெறப்படும்.
வேகம்
- இடப்பெயர்ச்சி மாற்ற வீதம் வேகமாகும். வேகத்திற்க்கு பருமனும் திசையும் காணப்படும். காவிக்கணியமாகும். இடப்பெயர்ச்சியை நேரத்தால் வகுக்கும் போது வேகம் பெறப்படும்.
ஆர்மூடுகல்
- வேகமாற்ற வீதம் ஆர்மூடுகலாகும். ஆர்மூடுகல் நேர் பெறுமானத்தை உடையவை. ஆர்மூடுகலானது மறைபெறுமதியை பெறும் போது அவை அமர்மூடுகல் எனப்படும்.
புவியீர்ப்பினாலான ஆர்மூடுகல்
- பொருளொன்றில் புவியிர்ப்பு விசைக்காரணமாக ஏற்படும் ஆர்மூடுகலாகும். பொருளொன்று மேலே இருந்து கீழ் விழும் போது புவியீர்ப்பு விசை தாக்கும். புவியீர்ப்பு ஆர்மூடுகலின் சராசரிப் பெறுமானம் 9.8ms-1 கணித்தலிற்காக 10ms-1 எனும் நியம பெறுமானம் பயன்படுத்தப்படும். g இதன் குறியீடு ஆகும்.
இணையவழி பயிற்சிகள்
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள விடைகளில் இருந்து சரியான விடைகளை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும்.
சரியான விடைகளை செய்க.
01.ஓய்விலிருந்து இயக்கத்தை ஆரம்பிக்கும் பொருளொன்று 4 செக்கனில் ஒரு சீரான ஆர்மூடுகலிற்க்கு உட்பட்டு 12ms-1 எனும் வேகத்தைப் பெறுகின்றது. அதன் பின்னர் மேலும் 4 செக்கனிற்க்கு சீரான வேகம் 12ms-1 உடன் இயங்கும் அப்பொருள் இறுதியில் 2 செக்கன் சீரான ஆர்மூடுகலுடன் ஓய்வுக்கு வருகின்றது. .
1.முதல் 4 செக்கனுக்கு ஆர்மூடுகலைக் கணிக்க.
2.இறுதி 2 செக்கனில் அமர்மூடுகலைக் காண்க.
3.இந்த 10 செக்கன்களில் பொருளின் இடப்பெயர்ச்சியை கணிக்க.
02.பின்வருவனவற்றுள் காவிக்கணியம் எது?
03.வேகமாற்ற வீதம் எனப்படுவது?
04.வேகத்தை அளவிடும் அலகு?.
05.ஒரு பொருளொன்று 30 செக்கனில் பயணம் செய்த தூரம் 180 எனின், கதி யாது?
06.பொருளொன்று உயரமான இடத்தில் இருந்து விழுந்து நிலத்தை அடைவதற்கு 6 செக்கன் எடுத்தது, எனின்,
1.அது நிலத்தை அடையும் போது அதன் வேகம் யாது?
2.பொருள் விழுந்த உயரத்தை காண்க?.
Tags:
Grade 10