தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11

 தாவர இழையங்கள்

தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11  பாடக்குறிப்புகள், பாடரீதியான அலகு பரீட்சை, இங்கு பதிவிறக்கலாம் தாவர இழையங்கள், தாவர பாடத்திற்கானழையங்களை வகைப்படுத்தல், அவற்றின் இயல்புகள், தொழில்கள் என்பன இணைக்கப்பட்டுள்ளது. அங்கிகளின் உடலில் குறித்தவொரு தொழிலை அல்லது தொழில்களை ஆற்றுவதற்காக சிறத்தலடைத்த ,பொதுவான உற்பத்தி தோற்றுவாயைக் கொண்டதுமான கலங்களின் கூட்டம் இழையமாகும்.


தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11
தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11


தாவர இழையங்களை வகைப்படுத்தல்.

இருகூட்டங்களான வகைப்படுத்தலாம்.

  1. பிரியிழையம
  2. நிலையிழையம்

பிரியிழையம்

  • சிறிய உயிருள்ள கலங்களாகும்
  • முனைப்பான கரு காணப்படும்
  • கலத்திடைவெளி அற்றவை
  • சிறிய புன்வெற்றிடம் காணப்படும்
  • இழைமணிகள் அதிகளவு காணப்படும்
  • பச்சையவுருமணிகள் இல்லை

நிலையிழையம்

நிலையிழையங்களை 2 வகைப்படுத்தலாம்;.

  • ஏளிய நிலையிழையம்
  • சிக்கலான நிலையிழையம்

 

எளிய நிலையிழையம்

எளிய நிலையிழையங்களை கலங்களின் வடிவம், கூறுகளை அடிப்படையாக கொண்டு 3 வகைப்படுதப்படும்.

  1. புடைக்கலவிழையம்
  2. ஓட்டுக்கலவிழையம்
  3. வல்லுருக்கலவிழையம்


தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11
தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11


 புடைக்கலவிழையம்

  • உயிருள்ள கலங்களைக் கொண்டது
  • மெல்லிய கலச்சுவர் காணப்படும்
  • பெரிய புன்வெற்றிடம் காணப்படும்
  • மெல்லிய செலுலோசினால் ஆன கலச்சுவர் உண்டு
  • சுற்றயலில் குழியவுரு காணப்படும் கரு காணப்படும்.


ஓட்டுக்கலவிழையம்

  • புடைக்கலவிழையங்கள் திரிபடைந்து உருவாகும்
  • உயிருள்ள கலங்களாகும்
  • புன்வெற்றிடம் ,கரு, குழியவுரு என்பன காணப்படும்
  • கலச்சுவரின் மூலையில் செலுலோசு தடிப்படைந்து காணப்படும்
  • அறுகோண வடிவகலங்களாகும்.


வல்லுருக்கலவிழையம்

  • இரண்டு வகைப்படும்
  • கற்கலங்கள் (வல்லுரு)
  • நார்க்கலங்கள்


சிக்கலான நிலையிழையம்

வேறுப்பட்ட பல கலங்களை கொண்டது

இரு வகைப்படும்

  1. காழ் இழையம்
  2. உரிய இழையம்


தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11
தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11


காழ் இழையம் -

  • இவ்விழையம் ஒன்றுக்கொன்று வேறுப்பட்ட 4 வகையான கலங்களைக் கொண்டது.
  • காழ்க்கலன் - உருளைவடிவான நீண்ட கலமாகும், தொடர்ச்சியான குழாயாக காணப்படும், இக் குழாயினூடாக மேல்நோக்கி நீர் கொண்டு செல்லப்படும். உயிரற்றவை
  • குழற்போலி - இருமுனைக் கூம்பிய நீண்ட கலங்களாகும். நீரை கடத்த உதவும். உயிரற்றவை
  • காழ் நார்கள் - குழற்போலிகளை விட குறுகிய மெல்லியவை. உயிரற்றவை
  • காழ் புடைக்கலவிழையங்கள் - மெல்லிய கலச்சுவர் உடைய உயிருள்ள கலங்கள், உணவு சேமிக்கும்.


உரிய இழையம்

  • 4 வகையான கலங்களை கொண்டது
  • நெய்யரிக்குழாய் மூலகம் - அறுகோண வடிவ கலங்கள், உணவு கடத்தலில் பங்களிப்பு செய்யும் (சுக்குரோசு). கரு இல்லை.
  • தோழமைக்கலம் - நீண்ட குழாயுருவான கலம், இதன் கருவினூடாக நெய்யரிக்குழாயின் செயற்பாடுகள் கட்டுபடுத்தப்;படும்.
  • உரியநார் - உயிரற்றது. இடங்களில் காணப்படும்.
  • உரியப்புடைக்கலவிழையம் - உயிருள்ளது. இரு வித்திலை தாவரத்தில் மட்டும் காணப்படும்.

 

  • தாவர இழையங்கள் விஞ்ஞானம் தரம் 11 பாடத்திற்கான பாடக்குறிப்புகள்( pdf)

Post a Comment

Previous Post Next Post