ஒளித்தொகுப்பு
ஓளித்தொகுப்பு
தரம் 11 விஞ்ஞானம் , ஒளித்தொகுப்பு, ஒளித்தொகுப்பின் மீது செல்வாக்கு செலுத்தும் காரணிகள், ஒளித்தொகுப்பின் விளைவுகள், ஒளித்தொகுப்பின் முக்கியத்துவம் என்பவற்றை உள்ளடக்கிய பாடக்குறிப்புகள், முன்வைப்பிற்கான , இணையவழி பயிற்;சிகள், இவ் இணையத்தளத்தினூடாக பதிவிறக்கலாம்.
ஒளித்தொகுப்பு
சூரிய
ஒளித் சக்தியைப் பயன்படுத்தி காபனீரொட்சைட்டு, நீர், என்பவற்றை மூலப்பொருளாக் கொண்டு பச்சைத்தாவரங்களில் உள்ள பச்சையவுருமணியில் நடைப்பெறும் உணவு தொகுக்கும் செயன்முறை ஒளித்தொகுப்பாகும்.
![]() |
ஒளித்தொகுப்பு தரம் 11 விஞ்ஞானம் |
ஒளித்தொகுப்பின் மீது செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
- பச்சையம்
- ஒளி
- நீர்
- காபனீரொட்சைட்டு
ஒளித்தொகுப்பின் விளைவுகள்
பிரதான
விளைப்பொருளாக குளுக்கோசு பெறப்படும். பக்க விளைவாக ஒட்சிசன் பெறப்படும். ஒட்சிசன் இலைவாயினூடாக பரவல் மூலம் வளிமண்டலத்தை அடையும். குளுக்கோசு தற்காலிகமாக மாப்பொருளாக சேமிக்கப்படும். ஒரு பகுதி சுக்குரோசாக மாற்றப்பட்டு உரிய இழையத்தினூடாக ஏனைய பகுதிகளுக்கு கடத்தப்படும்.
![]() |
ஒளித்தொகுப்பு தரம் 11 விஞ்ஞானம் |
ஒளித்தொகுப்பின் முக்கியத்துவம்
- புவியில் அங்கியின் நிலவுகைக்கு அவசியமாகும்.
- சுவாசத்திற்க்கும் தகனதிற்க்கும் தேவையான ஒட்சிசனை ஒளித்தொகுப்பின் மூலம் தாவரங்கள் விடுவிக்கும்.
- சூழலில் உள்ள காபனீரொட்சைட்டு வாயுவின் அளவை கட்டுப்படுத்தும்.
- ஓட்சிசனினதும் காபனீரொட்சைட்டு வாயுவினதும் சமநிலையை பேண உதவும்.
- காபன் வட்டத்தை பேண உதவும்.
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள விடைகளில் இருந்து சரியான விடைகளை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும்.