விலங்கிழையம்
விலங்கிழையம்
தரம் 11 இப்பாடப்பரப்பிற்கான அனைத்துப் பாடக்குறிப்புகள் , அலகு ரீதியான பரீட்சை வினாத்தாள், முன்வைப்புக்களை மேற்கொள்வதற்கான pdf என்பன இவ் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு விலங்குகளின் உடலில் காணப்படுகின்ற ஒரு தொழிலை அல்லது தொழில்களை ஆற்றுகின்ற , பொது தோற்றுவாயை உடைய கலங்களின் கூட்டம் விலங்கிழையமாகும். முள்ளந்தண்டுளிகளில் 4 வகையான இழையங்கள் உள்ளன.
- மேலணியிழையம்
- தொடுப்பிழையம்
- தசையிழையம்
- நரம்பிழையம்
விலங்கிழையம் தரம் 11 விஞ்ஞானம் |
மேலணி இழையம்
- விலங்குகளின் எல்லா மேற்பரப்புக்களிலும் காணப்படும், (அக ,புற). பாதுகாப்பை வழங்கும்.
- அகத்துறிங்சும் தொழிலை மேற்கொள்ளும். (சமிப்பாட்டு விளைவுகள்)
- தூண்டல்களை பெறுதல்
- சுரத்தல் தொழிலை மேற்கொள்ளல்
- வடிக்கட்டல் தொழிலை மேற்கொள்ளல்

விலங்கிழையம் தரம் 11 விஞ்ஞானம்
தொடுப்பிழையம்
- குருதி இழையம் - விசேட தொடுப்பிழையமாகும்.
- பதார்த்தங்களை கொண்டு செல்லல்
- பாதுகாப்பு வழங்கும்.
- ஓர்சீர்த்திட நிலைக்கு உதவும்

விலங்கிழையம் தரம் 11 விஞ்ஞானம்
தசையிழையம்
- மூன்று வகைப்படும்.
மழமழப்பான தசையிழையம் -
உடலின் உள்ளிடம் கொண்ட அங்கங்களில் காணப்படும். கதிருருவான கலங்களாகும். கிளைக் கொள்ளாதவை, மத்தியில் பெரிய கரு காணப்படும். குறுக்குவரிகள் காணப்படாது. விரைவில் களைப்படையாதவை. இச்சையின்றி இயங்குவன.
இதயத் தசையிழையம் -
இதயத் தசைக் கலங்களால் ஆனது. கிளைக் கொண்டவை. தனிக் கரு காணப்படும். வரிகள் காணப்படும். களைப்படையாது. இச்சையின்றி இயங்கும். சந்ததிற்க்குரிய அசைவைக் காட்டும்.
வன்கூட்டுத் தசையிழையம் -
நீண்ட உருளை வடிவ கலங்களாகும். பல்கரு காணப்படும். கலம் விளிம்பிற்க்கு தள்ளப்பட்டுக் காணப்படும். அதிகளவு இழைமணியை கொண்டது. விரைவாக களைப்படையும். இச்சைவழி இயங்கும்.

விலங்கிழையம் தரம் 11 விஞ்ஞானம்
நரம்பிழையம்
- நரம்பிழையத்தின் கட்டமைப்பு அலகு நரம்புக்கலமாகும்.
- நரம்புக்கலத்தின் இயல்புகள் - பிரதான 2 பகுதிகள் காணப்படும்.
- கலவுடல், நரம்புநார்கள் என்பனவாகும்.
- கலவுடலில் கரு, இழைமணி, இலைசோசம், கொல்கியுடல் ,அகக்கலவுரு சிறுவலை என்பவற்றை கொண்டுக் காணப்படும்.
- மூன்று வகைப்படும்.
- புலன் நரம்புக்கலம்
- இயக்க நரம்புக்கலம்
- இடைத்தூது நரம்புக்கலம்
விலங்கிழையம் தரம் 11 விஞ்ஞானம் |
விலங்கிழையம் தரம் 11 இப்பாடப்பரப்பிற்கான முன்வைப்புக்களை மேற்கொள்வதற்கான pdf இவ் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
Tags:
Grade 11