நீர் ஓர் இயற்கை வளம்
நீரின் முக்கியத்துவம்
நீர்
ஓர் இயற்கை வளம் தரம் 6 விஞ்ஞானம் எனும் பாடப்பரப்பின் உள்ளடக்கம், பௌதீக நிலைகளின் அடிப்படையில் நீரை வகைப்படுத்தல், நீர் பெறப்படும் மூலங்கள், நீரின் உவர்தன்மை, நீரின் முக்கியத்துவம், நீர் மாசடைதல், புவி மேற்பரப்பில் காணப்படும் நீர் போன்றவற்றை இவ் இணையத்தில் பெறலாம்.
![]() |
நீரின் முக்கியத்துவம் - நீர் ஓர் இயற்கை வளம் தரம் 6 விஞ்ஞானம் |
நீரின் முக்கியத்துவம்
உயிரங்கிகளின்
நிலவுகைக்கு நீரானது முக்கியத்துவமானது. பல்வேறு மனித செயற்பாடுகளை மேற்கொள்ள நீரானது அவசியமாகும்.
- விவசாயம், கைத்தொழில் நடவடிக்கைளுக்கு உதவும்
- சக்தி உற்பத்திக்கு பயன்படும்.
- சுத்தப்படுத்தல் நடவடிக்கைக்கு பயன்படும்.
- போக்குவரத்து ஊடகமாகும்.
- நீர் விளையாட்டுக்கு பயன்படும்
- வீட்டுத்தேவைகளுக்கு பயன்படும்.
- ஓய்வு நேர செயற்பாடுகளுக்கு பயன்படும்
- பருகுவதற்க்கு பயன்படும்.
- குளித்தல், ஆடைகளை கழுவுதல், போன்ற மனித செயற்பாடுகளிற்க்கு பயன்படும்.
பௌதீக நிலைகளின் அடிப்படையில் நீரை வகைப்படுத்தல்
- இயற்கை சூழலில் காணப்படும் நீரானது திண்மம், திரவம், வாய ஆகிய 3 நிலைகளில் காணப்படும்.
![]() |
நீரின் முக்கியத்துவம் - நீர் ஓர் இயற்கை வளம் தரம் 6 விஞ்ஞானம் |
- துரவ பிரதேசங்களில் நீரானது பனிக்கட்டி நிலையில் காணப்படும். உதாரணமாக பனியாறு. அது கிளேசியர் எனப்படும்.
திரவ நிலையில் காணப்படும் நீர்
- குளங்கள், அருவி ,ஓடை, சமுத்திரம் போன்றவற்றில் காணப்படும்.
வாயு நிலையில் காணப்படும் நீர்
- கொதிக்கும் நீர் வாயு நிலைக்கு செல்லும் இது கொதிநீராவி எனப்படும். உதாரணமாக, நீராவி
நீர் பெறப்படும் பல்வேறு மூலங்கள்
- மூன்று வகைப்படுத்தலாம்
- படிவு வீழ்ச்சி
- மேற்பரப்பு நீர்
- நிலக்கீழ் நீர்
படிவு வீழ்ச்சி
- மழை , பனி மழை,ஆலங்கட்டி மழை, பனிக்கட்டி மழை என்பனவாகும்.
மேற்பரப்பு நீர்
- சமுத்திரங்கள், ஆறு, குளம், ஏரி ,ஓடைகள், தடாகங்கள் போன்வற்றில் காணப்படும் நீராகும்.
நிலக்கீழ் நீர்
- கிணறு , ஊற்றுக்கள், போன்றவற்றில் காணப்படும் நீராகும்.
நீரை உவர்த்திறன் அடிப்படையில் வேறுப்படுத்தல்
கடல்
நீரில் பல்வேறு பதார்த்தங்கள் கரைந்துக் காணப்படுகின்றன. இவை உப்புக்கள்
ஆகும். சோடியம் குளோரைட்டு (உப்பு) கரைந்துள்ளது, கரைந்துள்ள உப்புக்களின் அடிப்படையில் நன்னீர், உவர் நீர், சவர் நீர் என வகைப்படுத்தலாம்.
நன்னீர் -
கிணறு
, தடாகம், ஆறு ,நீர்வீழ்ச்சி ,ஓடைகள் என்பவற்றில் காணப்படும்.மிகக் குறைந்துள்ள உப்புக்களை கொண்ட நீராகும்.
உவர் நீர் -
கடல்
, சமுத்திரங்களில் காணப்படு;ம் நீராகும். ஆதிகளவான
உப்பு கொண்டது.
சவர் நீர் -
கழிமுகங்களில்
காணப்படும் நீராகும். உப்பின் அளவு உவர் நீரை விட குறைவாகவும் நன்னீரை விட அதிகமாகவும் காணப்படும்.
|
புவி மேற்பரப்பில் காணப்படும் நீரன் அளவு
- சமுத்திரம் கடல் நீர் - 97.41
- திண்ம நிலையில் காணப்படும் நீர் - 2.58
- பயன்படுத்தும் நீர் - 0.01

நீரின் முக்கியத்துவம் - நீர் ஓர் இயற்கை வளம் தரம் 6 விஞ்ஞானம்

நீர் மாசடைத்தல்
- உயிரங்கிகளின் நுகர்விற்க்கு பொருத்தமற்ற அளவிற்க்கு நீருடன் மாசு பொருட்கள் கலத்தல் நீர் மாசடைதல் எனப்படும்.

நீரின் முக்கியத்துவம் - நீர் ஓர் இயற்கை வளம் தரம் 6 விஞ்ஞானம்

நீர் மாசடையும் வழிகள்
- விவசாய இரசாயனங்கள் நீரில் கலத்தல்
- பொலித்தீன் மற்றும் பிளாத்திக் என்பன கலத்தல்
- தொழிற்சாலையில் சேர்க்கப்படும் கழிவுகள் நீருடன் கலத்தல்
- நீர் நிலையில் கழிவுகள் கலத்தல்
- நகர்புற குப்பைகூலங்கள் நீரில் கலத்தல்
- கால்வாய்களில் கழிவுநீர் கலத்தல்
நீர் ஓர் இயற்கை வளம் தரம் 6 விஞ்ஞானம் எனும் பாடப்பரப்பின் பாடக்குறிப்புக்கள் முன்வைப்புகளிற்காக இணைக்கப்பட்டுள்ளது.