அன்றாட
வாழ்வில் சக்தி
சக்தி முதல்கள்
அன்றாட
வாழ்வில் சக்தி தரம் 6 விஞ்ஞானம் பாட உள்ளடக்கம், சக்தி, சக்தி முதல்கள், சக்தி முதல்களின் பயன்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கிய முன்வைப்புக்களிற்கான , இணையவழிப் பயிற்ச்சிகள், அலகு ரீதியான பரீட்சை வினாத்தாள்கள் என்பவற்றை இவ் இணையத்தளத்தினூக பெற்றுக்கொள்ளலாம்.
சக்தி
- நாம் அன்றாட வாழ்வில் பல வேலைகளை மேற்கொள்கின்றோம். வேலையொன்றை மேற்கொள்ள சக்தி அவசியமாகும்.
- வேலை செய்யும் ஆற்றல் சக்தி எனப்படும்.
சக்தி முதல்கள்
- சக்தியை உற்பத்தி செய்யக்கூடியவை சக்தி முதல்களாகும். சக்தியை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு சக்தி முதல்களை பயன்படுத்துகின்றோம்.
- உதாரணமாக, சூரயன், காற்று, பாயும் நீர், சுவட்டு எரிப்பொருள், கடல் அலை, புவி வெப்பம், கருச்சக்தி (அணுக்கருச்சக்தி), வற்றுப்பெருக்கு, வெப்பம் போன்றனவற்றை குறிப்பிடலாம்.
சக்தி முதல்களின் பயன்பாடுகள்
சூரியன்
- சூரியனானது பிரதான சக்தி முதலாகும்.
- உயிரங்கிகளின் நிலவுகைக்கு ஒளித்தொகுப்பு முக்கியமான ஒன்றாகும்.
- ஓளித்தொகுப்பின் ஊடாக உணவினை தொகுக்க சூரிய ஒளி முக்கிமான காரணியாகும்.
- உணவு பொருட்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சக்தியானது சூரியனில் இருந்து பெறப்பட்டதாகும்.
- உடைகளை உலர்த்துதல், பயிர்ச்செய்கை, தானியங்கள், மிளகாய் உலர்த்துதல், மேலும் அன்றாட வாழ்கை செயல்களிற்க்கு சூரியசக்தி அவசியமாகும்.
- சூரிய நீர் வெப்பமாக்கி, வீடுகளின் கூரையில் காணப்படும் சூரிய நீர் வெப்பமாக்கி நீரை சூடாக்க பயன்படுத்தப்படுகின்றது.
- மின் உற்பத்திக்கான மாற்றுச்சக்தி பயன்பாடாக சூரியச்சக்தி பயன்படுத்தப்படுகின்றது.
- சூரியக்கலங்கள் சூரியனிலிருந்து சக்தியை பெற்று மின்னை உற்பத்தி செய்கின்றன.
காற்று
- காற்றுச்சக்தியானது வேலைகளை இலகுவாக செய்துக்கொள்ளப் பயன்படும் உடைகளை உலர்த்துதல், பொருட்களை உலர்த்துதல் , தானியங்களை உலர்த்துதல் போன்ற வேலைகளை காற்றுச்சக்தியை பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.
- காற்றுச்சக்தியை பயன்படுத்தி காற்றாலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
- அம்பாந்தோட்டை , புத்தளம் போன்ற பகுதிகளி;ல் காற்றுச்சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
நீர் (பாயும் நீர்)
- நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பாயும் நீரைப்பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும்.
- பாய்ந்து வரும் நீரின் வேகத்தின் மூலம் நீர் சுழலியை இயக்கி மின் பிறப்பாக்கி மூலம் மின் உற்பத்தி செய்யப்படும்.
உயிர்த்திணிவுகள்
- எரிப்பொருளிற்காக பயன்டுத்தப்படும் தாவர விலங்கு பாகங்கள் உயிர்த்திணிவாகும்.
- பிரதான உயிர்த்திணிவு விறகு ஆகும். மேலும் பழுதடைந்த காய்கறி, உணவு, சிரட்டை, கரி, மரத்தூள், வைக்கோல், உமி போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
- இது செலவு குறைந்த எரிப்பொருளாகும்.
you can download Energy sources pdf here :
you can download Energy sources (work sheet) pdf here :
Match the Questions and Answers
Tags:
Grade 6