நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்

 நிலைமின்

நிலைமின் தரம் விஞ்ஞானம் பாடக்குறிப்புகள்பாடரீதியான அலகு பரீட்சைஇங் பதிவிறக்கலாம். நிலை மின்னேற்றத்தின் வகைகள்,  நிலைமின்னுடன் தொடர்புடைய நிகழ்வுகள், பயன்பாடுகள், கொள்ளளவிகள்.

உரோஞ்சுவதன் மூலம் பொருளின் மேற்பரப்பின் மீது ஏற்படும் மின்னேற்றம் நிலை மின்னேற்றம் என அழைக்கப்படும்.

வில்லியம் கில்பர்ட் எனும் விஞ்ஞானி முதன்முதலில் நிலைமின்னேற்றத்தை கண்டுபிடித்தார். (கி.பி 1600)



நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்
நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்


நிலை மின்னேற்றத்தின் வகைகள்

  • நேர் நிலைமின்னேற்றம்
  • மறை நிலைமின்னேற்றம்

ஒத்த நிலை மின்னேற்றம் ஒன்றையொன்று தள்ளும். நேர் மின்னேற்றமும் நேர் மின்னேற்றமும் ஒன்றையொன்று தள்ளும்.

ஓவ்வா நிலை மின்னேற்றம் ஒன்றையொன்று கவரும். அதாவது நேர் மின்னேற்றமும் மறை மின்னேற்றமும் ஒன்றையொன்று கவரும்.



நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்
நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்



நிலைமின்னுடன் தொடர்புடைய நிகழ்வுகள்

  • மின்னல் உண்டாதல்
  • முகில்களில் ஏற்படும் நிலை மின்னேற்றம் சேர்வதால் ஏற்றம் பெற்ற முகில்கள் உண்டாகும். இவை மின் பொறியாக தரையின் மீது அல்லது வேறு முகிலின் மீது பாய்வது மின்னல் உண்டாதல் எனப்படும்.
  • பென்ஜமின் பிராங்களின் எனும் விஞ்ஞானி மின்னல் உண்டாதலை முதன் முதலில் ஆராய்ந்தார்.
  • தொலைக்காட்சி பெட்டிக்கு அருகே கைகளை கொண்டு செல்லும் போது உரோமங்கள் கவரப்படல்.


நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்


பயன்பாடுகள்

  • வானொலி , தொலைக்காட்சி பெட்டி , நிழற்பிரதி எடுப்பான் போன்ற இலத்திரனியல் உபகரணங்களில் நிலைமின்னேற்றம் பயன்படும்.


கொள்ளளவிகள்

நிலைமின்னேற்றத்தை தற்காலிகமாக சேமித்து வைக்கும் உபகரணம் கொள்ளளவியாகும். கொள்ளளவியில் உள்ள ஏற்றத்தின் அலகு பரட்டு (F) ஆகும்.



நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்
நிலைமின் தரம் 7 விஞ்ஞானம்

 

 


Post a Comment

Previous Post Next Post