மனிதக் கண்ணின்
கட்டமைப்பு
மனிதக்கண் தரம் 9 விஞ்ஞானம் ,இப்பாடப்பரப்பின் உள்ளடக்கம் மனிதக் கண்ணின் கட்டமைப்பு , தொழில்கள், கண் நோய்கள், இரு விழிப்பார்வை ,முப்பரிமாண பார்வை, போன்றவற்றை உள்ளடக்கிய pdf ,முன்வைப்புகளிற்கான pdf ,அலகு பரீட்சை பாடக்குறிப்பு போன்றன இணைக்கப்பட்டுள்ளன.
மனிதக் கண்ணின் கட்டமைப்பு
கட்கோளத்தில் புறத்தேயுள்ள பகுதியாகும். ஓளி ஊடுருவாது. வேண்ணிறமான திண்மப்படையாகும்.
ஒளிஊடபுகவிடக்கூடிய
மெல்லிய படையாகும். கதிராளிக்கு முன்பாக காணப்படும்.
வன்கோதுப்
படைக்கு உட்புறமாகக் காணப்படும் படையாகும். கண்ணிற்க்கு தேவையான குருதி விநியோகத்தை மேற்கொள்ளும்.
கண்ணினுள்
செல்லும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தும். கருவிழி என அழைக்கப்படும்.
பிசிர்த்
தசை
கண்வில்லையை
தாங்குவதற்க்கு உதவும். கண் வில்லையின் வளைவை மாற்றியமைக்க உதவும்.
கண்மணி
கதிராளியின்
மத்தியில் காணப்படும் வட்டவடிவ துவாரமாகும் ,ஒளியை உட்செல்லவிடும்.
கண்வில்லை
இருகுவிவு
வில்லையாகும். ஓளி ஊடுபுகவிடக் கூடியது. தேவைக்கேற்ப வளைவை மாற்றும். விழித்திரையில் விம்பத்தை குவிய செய்யப்பயன்படும்.
நீர்மயவுடணீர்
ஒளி
ஊடுகாட்டும். விழிவெண்படலத்திற்க்கும் கண்வில்லைக்கும் இடைப்பட்டுக் காணப்படும்.
கண்ணாடியுடணீர்
கண்வில்லைக்கு
உள்ளே காணப்படும். ஒளி ஊடுபுகவிடக்கூடியது. ஜெலி போன்ற பதார்த்தமாகும். கண்ணின் கோளவடிவத்தை பேணும்.
தோலுருப்படைக்கு
உட்புறமாக காணப்படும்.
ஓளிக்கு
உணர்திறனுடைய கூம்புக்கலங்கள், கோல்கலங்கள் காணப்படும்.
மஞ்சட்பொட்டு
விழித்திரையில்
தெளிவான விம்பம் பெறப்படும் இடமாகும்.
குருட்டிடம்
ஓளி
உணர் கலங்கள் இல்லை. பார்வை புலப்படாது.
பார்வை
நரம்பு
விழித்திரையில்
பெறப்படும் விம்பத்தை மூளைக்கு கொண்டு செல்லும்.
கண் நோய்கள்
இரு வகையாக குறிப்பிடலாம்.
- கட்காசம்
- குளுக்கோமா
கட்காசம்
கண்வில்லையில்
ஏற்படும் பாதிப்பாகும். கண்வில்லையில் ஒளி ஊடுபுகவிடக்கூடிய தன்மை அற்றுப்போய், பால்நிறமாக மாறும். கண்வில்லையில் உள்ள புரதம் நார்தன்மையாகும் இதனால் கட்காசம் ஏற்படும். பொருளிலில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவியாது சில கதிர்கள் மட்டமே விழித்திரையில் குவியும். இதனால் மங்கலாக அல்லது தெளிவற்றதாக காணப்படும்.
குளுக்கோமா
நீர்மயவுடனீர்
ஓடுவது தடைப்படுவதால் இந்நிலைமை ஏற்படும். அதாவது கதிராளிக்கும் விழிவெண்படலத்திற்க்கும் இடையே உள்ள நீர்தன்மையான பாய்மம் ஓடுவது தடைப்பட்டு அமுக்கம் அதிகரிப்பதனால் பார்வைநரம்பு சிதைவடையும். இதனால் மீள முடியாத குறுட்டு நிலை ஏற்ப்படும்.
கண்தொற்று
கண்ணில்
ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாக கண்ணில் பீழை ஏற்படல் ,நீர் வடிதல், போன்றன ஏற்படும். இது கண்நோய் எனப்படும். குணப்படுத்தக்கூடியது.
கண்ணை ஆரோக்கியமாக பேணுதல்
- தொலைக்காட்சி , தொலைப்பேசி என்பவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தடுத்தல் .
- மூக்கு கண்ணாடியை அணியும் போது வைத்திய ஆலோசனையை பெறல்
- கண் குறைப்பாடு உடையோர் அணியும் மூக்கு கண்ணாடியை பயன்படுவதை தவிர்த்தல்.
- சூரிய கிரகணத்தை, செறிவான ஒளியை அவதானிக்கும் போது நேரடியாக பார்க்காது பாதுகாப்பான முறைகளைக் கையாளுதல்.
- தனிநபர் ஆரோக்கியத்தைப் பேணல்.