மனிதக் காதின் கட்டமைப்பு
மனிதக்காதின் கட்டமைப்பு
மனிதக்காது பிரதானமாக 3 பிரதேசங்களைக் கொண்டது.
- புறச்செவி
- நடுச்செவி
- உட்செவி

மனிதக்காதின் கட்டமைப்பு தரம் 9 விஞ்ஞானம்

புறச்செவி
பின்வரும் பகுதிகளைக் கொண்டது.
- செவிச்சோணை
- புறச்செவிக்கால்வாய்
- செவிப்பறை மென்சவ்வு
செவிச்சோணை
- ஒலியலைகளை புறச்செவிகால்வாயினுள் செலுத்தும். கசியிழையத்தால் ஆக்கப்பட்டது.
புறச்செவிக்கால்வாய்
- ஓலியலைகளை செவிபறைக்கு கடத்தும்.
செவிப்பறை மென்சவ்வு
- ஒலியலைகளை பெற்று அதிர்வடையும். கேட்டலுக்குரிய புலனை கொடுக்கும்.
நடுச்செவி
நடுச்செவி பின்வரும் பகுதிகளை கொண்டது.
- செவிச்சிற்றென்புகள்
- ஊத்தேக்கியாவின் குழாய்
செவிச்சிற்றென்புகள்
- ஒலியதிர்வுகளை கடத்தும்
- செவிப்பறை மென்சவ்வில் இருந்து நத்தைச்சுருளை நோக்கி அதிர்வுகளை கடத்தும். மூன்று செவிச்சிற்றென்புகள் உள்ளன.
- சம்மட்டியுரு , பட்டையுரு , ஏந்தியுரு
ஊத்தேக்கியாவின் குழாய்
- தொண்டையுடன் தொடர்புபட்ட குழாயாகும் . அமுக்க சீராக்கத்தில் பயன்படும்.
உட்செவி
இது மூன்று பகுதிகளைக் கொண்டது.
- நத்தைச்சுருள்
- செவி நரம்புகள்
- அரைவட்டக்கால்வாய்.
நத்தைச்சுருள்
- செவி நரம்பிற்க்கு கேட்டலிற்கான புலங்களைக் கடத்தும்.
செவி நரம்புகள்
- மூளையுடன் காதை இணைக்கும் பகுதியாகும். கேட்டலுக்குரிய புலங்களை காதை நோக்கிக் கடத்தும். ஒலி இதனூடாக இனங்காணப்படும்.
அரைவட்டக் கால்வாய்
- இது கேட்டலுடன் தொடர்பான தொழில்களை மேற்கொள்ளாது. உடற்சமநிலையை பேண உதவும்.
ONLINE ASSESMENT EXCERSICE
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள 4 விடைகளில் இருந்து சரியான விடைகளை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும். இணையவழி பயிற்சியினை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் மேலே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியிளை பார்வையிடவும்.
சரியான விடைகளை தெரிவு செய்க.
1.மனித காதின் நடுச்செவி கட்டமைப்பில் உள்ளடங்கும் பகுதி எது?.
2.உடலைச் சமநிலைப்படுத்தும் மனித காதின் பகுதி எது? .
3.மனித செவியினால் கேட்கக்கூடிய ஒலியின் உச்ச மீடிறன் வீச்சு யாது?.
4.பின்வருவனவற்றில் செவிசிற்றென்பு அல்லாதது?.
5.கேட்டற் புலனுனர்வை மூலைக்கு கொண்டு செல்லும் பகுதி எது?.
Tags:
Grade 9