உலோகங்கள் – அலகு - 3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் - 10

 உலோகங்கள்

உலோகங்கள்அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10. விஞ்ஞானிகள் பல்வேறு முறைகள் மூலம் இது வரை  115 மேற்பட்ட மூலங்கங்களை கண்டுப்பிடித்துத்துள்ளனர். மூலகங்களின் பௌதீக இரசாயன இயல்புகளின் அடிப்படையில் உலோகங்கள் அல்லுலோகங்கள் உலோகப்போலிகள் என வகைப்படுத்தலாம். தற்போதுள்ள மூலகங்களில் பெரும்பாலானவை உலோகங்கள் ஆகும். 80 இற்க்கும் மேற்பட்டவை உலோகங்களாகும். இயற்கையில் சில சேர்வைகளாகவும் சில சுயாதீன மூலகங்களாகவும் காணப்படுகின்றன.


உலோகங்கள் – அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10
உலோகங்கள் – அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10


01.உலோகங்களின் பௌதீக இயல்புகள்


  • உலோகங்களின் மேற்பரப்புக்கள் மினுமினுப்பாகவையாகவும் அவற்றைத்தட்டும் போது கணீர் ஒலி எழுப்பக்கூடியதாகவும் காணப்படும்.
  • சாதாரண வெப்பநிலையில் திண்மமாக காணப்படும். எனினும் இரசம் திரவமாக காணப்படும். உலோகங்கள் வாட்டதகு இயல்புடையவை. நீட்டற்தகவு இயல்புடையவை.
  • சிறந்த மின் கடத்திகள்
  • நன்கு வெப்பத்தைக் கடத்துபவை.
  • பொதுவாக உயர் அடர்த்தி உடையவை.

02.உலோகங்களின் இரசாயன இயல்புகள்


  • உலோகங்களின் மின் நேர் மறைத்தன்மை - இவை இலத்திரன்களை இழக்கும் ஆற்றல் உடையவை. உலோகங்கள் நேர் அயன்களை உருவாக்கக்கூடியவை. (கற்றயன்கள்)
  • உலோகங்கள் ஒட்சிசனுடன் தாக்கமடைந்து மூல ஒட்சைட்டுக்களை உருவாக்கும். சில உலோகங்கள் வீரியமாக தாக்கமடையும்.
  • உலோகங்களின் நீருடனான தாக்கம் - உலோகங்கள் நீருடன் தாக்கமடைந்து ஜதரொட்சைட்டுககளையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும்
  • உலோகங்கள் அமிலங்களுடன் தாக்கம் - உலோக உப்புக்களையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும்.
  • நீரில் கரையும் மூல ஒட்சைட்டுக்கள் காரக் கரைசலை உருவாக்கக் கூடியவை.


உலோகங்கள்

சில உதாரணங்கள் :

  1. Li
  2. Be
  3. Na
  4. Mg
  5. Al
  6. K
  7. Ca
  8. Sc
  9. Ti
  10. V
  11. Cr
  12. Mn
  13. Fe

etc…

 

சோடியம்  (Sodium)



உலோகங்கள் – அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10
உலோகங்கள் – அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10



  • அணு எண் - 11
  • தாக்குதிறன் கூடிய மூலகமாகும்.
  • இயற்கையில் மூலக நிலையில் காணப்படாது.
  • சோடியம் குளோரைட்டாக சேர்வையாக காணப்படும்.
  • இது கடல் நீரில் கரைந்துக் காணப்படும்.
  • இது வளியுடனும் நீருடனும் வீரியமாகத்தாக்கமடையும்.ஆகவே வளியில் திறந்து வைக்கப்படமுடியாது.
  • இதனால் பரப்பின் எண்ணெய் அல்லது மண்ணெண்ணெயில் சேமிக்கப்படும். இதனால் திரவ மேற்பரப்பிற்க்கு வராமல் வளி தொடர்பு அகற்றப்படும்.
  • சோடியத்தின் மேற்பரப்பு மங்கியதாக காணப்படும். மினுமினுப்பு குறைவானது.
  • ஏனைய உலோகங்களுடன் ஒப்பிடும் போது சோடியம் மென்மையான உலோகமாகும்.
  • கத்தியால் வெட்டப்படக்கூடியது.
  • சுவாலைச்சோதனையில் பொன் மஞ்சள் நிறத்தை தோற்றுவிக்கும்.

சோடியத்தின் பௌதீக இயல்புகள்


  • மென்மையான மூலகமாகும்
  • இலகுவாக வெட்டப்படக்கூடியது.
  • வளியுடன் தாக்கமடைந்து மேற்பரப்பு மங்கியதாக காணப்படும்.
  • அடர்த்தி குறைவான மூலகமாகும். ( நீரிலும் பார்க்க அடர்த்தி குறைவானது.)
  • சிறந்த மின் கடத்தியாகும்
  • சிறந்த வெப்பக்கடத்தியாகும்.

சோடியத்தின் இரசாயன இயல்புகள்


  • இது வளியுடனும் நீருடனும் வீரியமாகத் தாக்கமடையும். ஆகவே வளியில் திறந்து வைக்கப்படமுடியாது
  • நீருடன் தாக்கமடைந்து ஜதரொட்சைட்டுககளையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும் .
  • உலோக உப்புக்களையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும். இது ஆபத்தான தாக்கமாகும்.

சோடியத்தின் பயன்பாடுகள்


  • சோடியம் சயனைட்டு தயாரிப்பு
  • சோடியம் அமில்கம் தயாரிப்பு
  • தைத்தேனியம் மற்றும் சேர்கேனியம் போன்ற உலோகங்களில் அவற்றை பிரித்தெடுக்கப் பயன்படும்.
  • சோடியம் ஆவி விளக்கு தயாரிப்பிற்க்கு பயன்படும்.
  • இன்டிகோ சாயம்  (டெனிம்துணிகளை நிறமூட்ட பயன்படும்) தயாரிப்பிற்க்கு பயன்படும்.
  • குளிர்த்தியாக பயன்படும். ( வாகன எஞ்சின்களில் )

சோடியம் உள்ளடங்கிய சேர்வைகள்


  • சோடியம் ஜதரொட்சைட்டு (NaOH)
  • சோடியம் குளோரைட்டு (உப்பு(NaCl)
  • சோடியம் இரு காபனேற்று ( பேக்கிங் சோடா(NaHCO3)
  • சோடியம் காபனேற்று (sodium ash) (Na2CO3)

 

மகனீசியம் (Magnesium)


உலோகங்கள் – அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10
உலோகங்கள் – அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் -  10



  • தாக்குத்திறன் கூடிய மூலகமாகும்.
  • இலேசான உலோகமாகும்.
  • சுயாதீனமாக இயற்கையில் காணப்படாது.
  • சேர்வையாக காணப்படும். கடல் நீரில் மக்னீசியம் குளோரைட்டாக காணப்படும்.
  • வளியில் வீரியமாக தாக்கமுறும்.
  • வளியில் மங்கிக் காணப்படும்.

 

 பௌதீக இயல்புகள்


  • நீரிலும் வளியிலும் தாக்கமடையக்கூடியது. நீரிலும் பார்க்க அடர்த்தி கூடியது.
  • உயர் மின் கடத்தியாகும்.
  • சிறந்த மின்கடத்தியாகும்.


இரசாயன இயல்புகள்


  • மக்னீசியத்தை வளியில் வெப்பபடுத்தும் போது பிரகாசமான வெண்ணிறச் சுவாலையுடன் எரியும். எரிந்து வெண்ணிற மக்னீசிய ஒட்கைட்டை தோற்றுவிக்கும்.
  • மக்னீசியம் குளிர் நீருடன் தாக்கமடையாது.
  • கொதிநீருடன் தாக்கமடைந்து மக்னீசியம் ஜதரொட்சைட்டையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும்.
  • கொதிநீராவியுடன் தாக்கமடைந்து மக்னீசியம் ஒட்சைட்டையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும்.
  • மக்னீசீயம் ஜதான அமிலத்துடன் விரைவாக தாக்கமடைந்து மக்னீசிய உப்பையும் ஜதரசன் வாயுவையும் உருவாக்கும்.


மக்னீசியத்தின் பயன்பாடுகள்


  • கலப்புலோகத் தயாரிப்பு
  • மக்னேலியம் தயாரிப்பிற்க்கு பயன்படும். இது விமானங்கள் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் தயாரிப்பிற்க்கு பயன்படும்.
  • மருந்து உற்பத்தியில் பயன்படும். ( மக்னீசியப்பால்)
  • அர்ப்பண உலோகமாக பயன்படும். இரும்பு துருப்பிடிப்பதை தடுப்பதற்க்கு பயன்படுத்தப்படும்.
  • Flashbulb தயாரிக்கப் பயன்படும்.


மக்னீசியம் உள்ளடக்கிய சேர்வைகள்


  • மக்னீசியம் குளோரைட்டு (MgCl2)
  • மக்னீசியம் சல்பேற்று (MgSO4)
  • மக்னீசியம் ஜதரொட்சைட்டு (MgOH)
  • மக்னீசியம் ஒட்சைட்டு (MgO)
  • மக்னீசியம் நைத்திரைட்டு(Mg3N2)

உலோகங்கள்அலகு -  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் 10 இவ் பாடக்குறிப்பிற்கான  PDF இனை இங்கு பதிவிறக்கலாம்.

உலோகங்கள் – அலகு  3 சடப்பொருள்களின் கட்டமைப்பு தரம் 10

QUIZ 


Post a Comment

Previous Post Next Post