ஒலி - ஒலி முதல்கள் - அலகு 5 - தரம் 8

 ஒலி

ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8. எமது சூழலில் பல்வேறு வகையான ஒலிகளை கேட்கின்றோம். அவற்றை இயற்கையான ஒலி செயற்கையான ஒலி என இரு வகைப்படுத்தலாம். பொருட்கள் அதிர்வதனால் ஒலி பிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு ஒலியை பிறப்பிக்கும் ஒலிமுதல்களில் இருந்தும் ஒலி ஒன்றிலிருந்து ஒன்று வேறுப்படுகின்றது. சில உதாரணங்கள் வருமாறு இயற்கையான ஒலிகள் - பறவைகளின் கீச்சிடும் சத்தம் நாயின் ஒலி நீர்வீழ்ச்சியின் சத்தம்

செயற்கையான ஒலிகள் - இயந்திரங்களில் இருந்து பிறப்பிக்கப்படும் ஒலி புகையிரத ஒலி வாகனங்களின் ஒலி


ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8
ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8


ஒலி முதல்களின் அதிர்வுறும் பகுதிகளுக்கு ஏற்ப வகைப்படுத்தல். மூன்று வகைப்படும். மென்சவ்வு அதிர்வதன் மூலம் ஒலியை பிறப்பிக்கும் ஒலிமுதல்கள் வளிநிரல் அதிர்வதன் மூலம் ஒலியை பிறப்பிக்கும் ஒலி முதல்கள் இழைகள் அதிர்வதன் மூலம் ஒலியை பிறப்பிக்கும் ஒலி முதல்கள்


ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8
ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8


  • மென்சவ்வு அதிர்வதன் மூலம் ஒலியை பிறப்பிக்கும் ஒலிமுதல்கள்

மேளம் , வீர முரசு (டமாரம்)

தவில் , துடி

தபேலா , மிருதங்கம்

தம்பட்டம் , உருமி

உடுக்கை , தப்பு


  • வளிநிரல் அதிர்வதன் மூலம் ஒலியை பிறப்பிக்கும் ஒலி முதல்கள்

புல்லாங்குழல் , தாரை

சுருதிப்பெட்டி , ஓத்து

மகுடி , முகர்சிங்

எக்காளம்  , நாயினம்

சங்கு , கொம்பு


  • இழைகள் அதிர்வதன் மூலம் ஒலியை பிறப்பிக்கும் ஒலி முதல்கள்

வீணை , ஜலதரங்கம்

யாழ் , வயலின்

தம்புறா , துந்தினா

சித்தார் , ஸ்வரபத்

ஏக்தார் , பிடில்

 

ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8
ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8

இசைச்சுரமும் இரைச்சலும்

வயலின் ஒலி அல்லது கிட்டார் ஒலி போன்றன எமது காதுகளிற்க்கு இனிமையானவை. இவை செவிமெடுப்பதற்க்கும் இனிமையானது. எமது காதுகளுக்கு இனிமையான ஒலி சந்தமைவுடன் இசைக்கப்படுவது இசை ஆகும். எனினும் தொழிற்சாலைகளில் இயந்திர ஒலி வீதியில் செல்லும் வாகன ஒலி என்பன அவ்வளவு விருப்பத்திற்குரியன அல்ல. எமது காதுகளுக்கு இனிமையற்ற ஒலி இரைச்சல் அல்லது சத்தம் எனப்படும்.


புராதன மரபு ரீதியான மற்றும் நவீன இசைக்கருவிகள்


புராதன காலங்களில் இருந்து வழிப்பாடுத்தங்களில் சமய நிகழ்வுகளில் மரண கிரியைகள் போன்றவற்றில் மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளில் இசைக்கருவிகள் பயன்படுத்தப்ட்டன. உதாரணமாக தவில்இ நாதஸ்வரம்இ கீழ்நாட்டுப்பறைஇ மேல்நாட்டுப்பறைஇ உடுக்குஇ தம்பட்டம்இ மத்தளம்இ போன்றன மரபு ரீதியானவை.


நவீன இசைக்கருவிகள்

  1. The seaboard
  2. Hand pan drums
  3. Talkbox
  4. Guitarviol etc..

அதிர்வு மீடிறன்


நாம் கேட்கும் பல்வேறு ஒலி முதல்களிடையே வேறுபாடுகள் காணப்படுவதற்கான காரணம் மீடிறனாகும். ஒலிமுதலொன்றின் மூலம் ஓரலகு நேரத்தில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வு மீடிறனாகும். அதிர்வு மீடிறனை அளக்கும் சர்வதேச அலகு Hz ஆகும்.


கேள்தகு எல்லை

  • மனித காதினால் கேட்கக்கூடிய ஒலியின் கேள்தகு எல்லை 20Hz தொடக்கம் 20000Hz ஆகும்.
  • வெளவாலுக்கு 70000Hz வரையான ஒலியை கேட்கமுடியும். நாயிற்க்கு 20 Hz இனை விட குறைந்த ஒலியையும் 25000Hz இனை விட கூடிய ஒலியையும் கேட்கமுடியும்.


ஒலி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

ஏதாவது ஒன்று அதிர்வுறும் போது ஒலி உருவாகிறது, இது காற்று அல்லது பிற பொருட்கள் வழியாக அலைகளை அனுப்புகிறது.அதிர்வுறும் பொருள் சுற்றியுள்ள மூலக்கூறுகளையும் நகர்த்துகிறது.நம் காதுகளை அடையும் வரை  ஊடகம் (திடப்பொருள்கள், திரவங்கள் மற்றும் வாயுக்கள்) வழியாக பயணிக்கிறது.


ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8
ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8


மனிதர்கள்  ,  விலங்குகள் செவிப்புலன் வரம்புகள் - சில விலங்குகள் மனித திறன்களுக்கு அப்பாற்பட்ட அதிர்வெண்களைக் கேட்க முடியும், பல விலங்குகள் மனிதர்களை விட வேறுபட்ட செவிப்புலன் வரம்புகளைக் கொண்டுள்ளன, பெரும்பாலும் அவற்றின் சூழல் மற்றும் தொடர்புத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகின்றன.


ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8
ஒலி - ஒலி முதல்கள் இசைக்கருவிகள் - அலகு 5 - தரம் 8



 

 

Post a Comment

Previous Post Next Post